தேசிய செய்திகள்

16 மாநிலங்களில் 30 -ம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

16 மாநிலங்களிலும், சண்டிகர், டெல்லி, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மே 30 முதல் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) வரும் மே 30 முதல் தொடங்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், மகாராஷ்டிரம், மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 16 மாநிலங்களிலும், சண்டிகர், டெல்லி, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மே 30 முதல் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் அங்கு எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.