தேசிய செய்திகள்

வாலிபருடன் தங்கை அடிக்கடி உல்லாசம்... ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்

சத்யவ்வாவுக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் யமகனமரடி பகுதியை சேர்ந்தவர் சத்யவ்வா சந்தோஷ் ஹெலவி (வயது 24). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்த நிலையில் சத்யவ்வாவுக்கும், வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சத்யவ்வா, தனது கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாக தெரிகிறது. இது பற்றி சத்யவ்வாவின் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதனால் அவமானம் அடைந்த அவர்கள், சத்யவ்வாவை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, சத்யவ்வாவின் இருப்பிடத்தை கண்டறிந்த அவர்கள், சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டில் வைத்து அவரது அண்ணன் ஷானூர் சதாசிவா ஹெலவர் (35) என்பவர் தனது உறவினர்களான பிரகாஷ் பீமப்பா (46), கல்லப்பா மாயப்பா (40) ஆகியோருடன் சேர்ந்து சத்யவ்வாவின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி உள்ளனர். இதனை குடித்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சத்யவ்வா உடலை மயானத்துக்கு எடுத்து சென்று யாருக்கும் தெரியாமல் உடலை எரித்துள்ளனர். இதுபற்றி அறிந்த சத்யவ்வாவின் தாய், யமகனமரடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், ஷானூர் சதாசிவா உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலனுடன் சத்யவ்வா ஓடியதால், தங்களுக்கு அவமானம் ஏற்பட்டதாகவும், இதனால் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு உலை தீவைத்து எரித்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்த னர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.