தேசிய செய்திகள்

மாணவர்களின் உயிரைக் காக்க ஸ்மார்ட் மின்விசிறிகள்! - குஜராத் பல்கலைக்கழகம் புதிய முயற்சி

இந்த மின்விசிறிகளில், அதிக எடை ஏற்படும்போது செயல்படும் வகையில் சிறப்பு ஸ்பிரிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

காந்திநகர்,

குஜராத் பல்கலைக்கழகம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடு

குஜராத் மாநிலத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மாணவர் விடுதிகளில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்பிரிங் அமைப்பு

இந்த மின்விசிறிகளில், அதிக எடை ஏற்படும்போது செயல்படும் வகையில் சிறப்பு ஸ்பிரிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 10 கிலோவுக்கும் அதிகமான எடை கொடுக்கப்படும்போது, ஸ்பிரிங் விரிவடைந்து மின்விசிறி கீழ்நோக்கிச் சாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.

மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், விடுதிகளில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் உயிரைப் பாதுகாப்பதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT