தேசிய செய்திகள்

இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை கடும் சரிவு

உலக அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது

மும்பை,

உலக அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 60 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன்களின் சந்தையாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

விற்பனை சரிவு

இந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. 2026ம் ஆண்டின் 2ம் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 11.1 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிக மோசமான முதல் அரையாண்டு சரிவாகும். விவோ, சியோமி, ஒப்போ, ரியல்மி, போகோ உள்பட இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அனைத்து வகை போன்களின் விற்பனையும் குறைந்துள்ளது. அதேவேளை, ஆப்பிள், சாம்சாங் ஆகிய நிறுவன ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட் போன் உதிரி பாகங்களின் தேவை அதிகரித்து அதன் விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்ததால் ஸ்மார்ட் போன் விலை அதிகரித்து விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.