தேசிய செய்திகள்

துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் ரூ.4.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

தங்கத்தை கடத்தி வந்தது தொடர்பாக ஒரு பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பயணி, தங்கத்தை உருக்கி ‘தரை ஸ்பிரிங்’ கம்பியாக வடிவமைத்து தனது உடைமையில் கடத்தி வந்தது தெரியவந்தது. ‘தரை ஸ்பிரிங்’ என்பது, பொதுவாக ஒரு கதவுக்கு அருகில், தரைக்கு அடியில் பொருத்தப்படும் ஒரு எந்திர சாதனமாகும். இது கதவைத் திறப்பதையும் மூடுவதையும் கட்டுப்படுத்துவதோடு, அது தானாகவே மூடுவதையும் உறுதி செய்கிறது.

இதையடுத்து அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பிலான 3 கிலோ தங்க கம்பிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT