புதுடெல்லி,
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார். தனது முதல் பதிவில், 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற தலைப்பிலான தனது சுயசரிதை புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகம், காதல், கடமை, துயரங்கள் மற்றும் தனக்கென ஒரு இடத்தைத் தேடுதல் போன்ற தனது வாழ்க்கையின் அம்சங்களை விவரித்துள்ளது.
தனது சுயசரிதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாகவும், இந்தப் புத்தகம் நவம்பர் 10-ந் தேதி உலகளவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், புத்தகத்தில் நிறைய புகைப்படங்கள் இருப்பதாக அவர் பிரியங்காவிடம் கூறுவது தெரிகிறது.
பின்னர், பிரியங்கா தனது தாய்க்கு இனிப்பு ஊட்டுகிறார். இருவரும் பாசத்துடன் ஒருவரையொருவர் அணைத்து கொள்கின்றனர். இந்த வீடியோ வைராலாகி வருகிறது.