தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம்தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள அவரது நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ராஜவ காந்தி பிரதமராக பொறுப்பேற்றார். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப் படை பயங்கரவாதத் தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்ட தினம், இந்தியாவில் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.