புதுடெல்லி,
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவில் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதிபராகப் பதவியேற்ற பிறகு அவர் இந்தி யாவுக்கு வருவது இதுதான் முதல்முறை. ஏப்ரல் 19-ல் இந்தியா வரும் அவர் பிரதமர் மோடியு டன் 20-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கப்பல் கட்டுதல், செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 2030-க்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.