இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கும். பிற தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கருத்து மோதல்கள் இருந்ததாகவும், அதன் பேரில் 2 கமிஷனர்களும் மத்திய மந்திரிசபை செயலாளருக்கு கடிதம் எழுதினார்கள் என்றும் பரபரப்பு தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி உள்ளன. இதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 48 மணி நேரம் கெடுவும் விதித்தது.இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேர்தல் கமிஷனின் முழு அமர்வு கூட்டம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவரங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேர்தல் கமிஷன் பின்னர் அறிக்கை வெளியிட்டது.சமீபத்திய சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேர்தல்கமிஷன் சமீபத்திய மாதங்களில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்பட பல முடிவுகளை எடுத்துள்ளது. பீகாரில் தொடங்கி, மேற்கு வங்காளம் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குமான சிறப்பு தீவிர திருத்தத்துக்கான உத்தரவு 24-6-2025-ந்தேதி தேர்தல் கமிஷனின் ஒருமனதான ஒப்புதலுடன் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டால் 27-5-2026-ந்தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவம் 6-ல் இணைக்கப்பட்டுள்ள அம்சங்களை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் அல்லாத காலத்துக்கு, விதிகளின்படி (வாக்காளர் பதிவு விதிகள் 1960) பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.
இந்தப்பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்ப டையில் சில மாநிலங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.3-ம் கட்டமாக நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத் தில் மீதமுள்ள 12 மாநிலங்களில் இறுதி அறிவிப்பு வெளியான பின்னரே வாக்காளர்களின் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.பீகார் மற்றும் மேற்கு வங்காளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.இதில் பெயர் விடுபட்ட இளம் மற்றும் முதல்முறை வாக்காளர் உள்பட எந்தவொரு நபரும், தொடர்ச்சியான புதுப்பித்தல் செயல்முறையின் கீழ் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு வசதி செய்து தருமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக உடனடியாக ஒரு சிறப்பு இயக்கத்தை அதிகாரிகள் தொடங்குவார்கள்.மத்திய மந்திரி சபை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம், தேர்தல் கமிஷன் அல்லது தகவல் தொழில்நுட்பப்பிரிவின் எந்தவொரு கொள்கை விஷயம் தொடர்பானது அல்ல.அது, தேர்தல் கமிஷனுக்கு பிற இடத்தில் இருந்து மாற்றப்பட்ட ஒரு அதி காரியின் பணி தொடர்பானது. சம்பந்தப்பட்ட அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட பணி மறுபங்கீட்டு உத்தரவுகள், 2 கமிஷனர்களின் உத்தரவுகளுக்குப் பிறகும் உண்மையில் செயல்படுத்தப்படவில்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.