பெங்களூரு,
முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்களிடம் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம், எங்களிடம் இருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து விவாதித்தோம். கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடை பெற உள்ளன.
வாக்காளர்களின் வாக்குகளை காப்பாற்ற வேண்டும். இதற்கு எல்லா கட்சிகளும் வாக்குரிமையை காக்க தேவையான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். பிற மாநிலங்களில் 60 லட்சம், 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதே போல் கர்நாடகத்தில் நடைபெறக்கூடாது. நமது உள்ளாட்சி அமைப்புகள் இருப்பிட சான்றிதழ் வழங்க அவகாசம் உள்ளது.
கர்நாடகத்தில் ரவுடிகளை ஒடுக்க போலீஸ் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தனிப்படையை தாலுகா அளவில் உருவாக்க வேண்டும். பழைய ரவுடிகள், புதிதாக உருவாகும் ரவுடிகளை போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.