சோனம் வாங்சுக் 
தேசிய செய்திகள்

போராட்டங்களை ஒடுக்கினால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கை, வங்காளதேசமே உதாரணம்: சோனம் வாங்சுக் எச்சரிக்கை

போராட்டங்களை ஒடுக்கினால் என்ன நடக்கும் என் பதற்கு இலங்கை, வங்கதேசம் நாடுகளில் நடந்த கிளர்ச்சி சிறந்த உதாரணம் என்று சோனம் வாங் சுக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டங்கள்

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகள், நாடாளுமன்றத்திற்கு முன்பாகவே மக்கள் போராட்டம் நடத்துவதற்கு மகிழ்ச்சியுடன் அனுமதி வழங்குகின்றன. இங்கிலாந்து, நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்தின் முன்பகுதிதான் போராட்டங்களின் முகமாகவே திகழ்கிறது.

ஆனால், இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இருந்து வெகுதொலைவில்தான் போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி கூட நாடாளுமன்றத்திற்கு மிக தொலைவில்தான் உள்ளது. அரசாங்கங்கள் தங்களது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக்கி கொள்ள, மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றன.

சிறந்த உதாரணம்

ஆனால், போராட்டங்களை அனுமதிக்க மறுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு அண்டை நாடுகளான இலங்கை மற்றும் வங்காளதேசத்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியே மிகச்சிறந்த உதாரணம்.போராட்டம் நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை. நகரில் திருவிழாக்கள் போன்ற பிற பொது நிகழ்வுகள் ஏதேனும் நடக் கிறதா என்பதை ஒழுங்குபடுத்த மட்டுமே அதிகாரிகள் அனுமதி அளிக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரதம்

டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கிய நிலையில், சோனம் வாங்சுக்கின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின்போது சோனம் வாங்சுக் 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT