எல்லை பாதுகாப்பு படை  
தேசிய செய்திகள்

சீன ராணுவத்துடன் மோதல் நீடிக்கிறது: எல்லை பாதுகாப்பு படை தலைவர் பேச்சு

சீனா நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்து வருவதால், பாரம்பரிய முறைகளை மட்டுமே பயன்படுத்தி அந்நாட்டை எதிர்கொள்வது கடினம் என்று எல்லை பாதுகாப்பு படை தலைவர் கூறினார்.

அருணாசல பிரதேச எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தினருடன் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோதல் நிலவி வருவதாக இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தெரிவித்துள்ளார்.

சவுரியா’ கமாண்டோ படை

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்ருஜீத் கபூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக அருணாசல பிரதேச எல்லையில் பல்வேறு இடங்களில் இந்தியா-சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நிலைமை தொடர்ந்து வருகிறது. எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சவுரியா’ கமாண்டோ படையினர், சீன ராணுவத்தினருடனான இந்த மோதல்களின்போது சிறப்பாகச் செயல்பட்டனர் இந்த கமாண்டோ பிரிவினர் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் இடம்பெறுவார்கள்

எல்லைக் காவல் படையினருக்குப் பயிற்சி

சீனா நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்து வருவதால், பாரம்பரிய முறைகளை மட்டுமே பயன்படுத்தி அந்நாட்டை எதிர்கொள்வது கடினம் .டிரோன்கள் மற்றும் டிரோன்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைப் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் வகையில், எல்லைக் காவல் படையினருக்குப் பயிற்சி அளிக்க ஸ்டிரைக் என்ற புதிய பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பயிற்சி அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT