தேசிய செய்திகள்

ஸ்டார்லிங் இணைய சேவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பாஜக எம்பி எச்சரிக்கை

அமெரிக்கா போன்ற நாடு​களில் ஏழைகளுக்​குக் குறைந்த விலை​யில் இணையவசதியை எலான் மஸ்க் முதலில் வழங்க வேண்​டும் என்று பாஜக எம்பி கூறினார்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக எலான் மஸ்க் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய தொழிலதிபர்கள் சுயநலன்களுக்காக ஸ்டார்லிங் சேவையை முடக்குவதாகவும் விமர்சித்து இருந்தார். இன்னும் ஒரு படிமேலே சென்று முகேஷ் அம்பானியை நேரடியாக விமர்சித்து இருந்தார்.

எலான் மஸ்க்கின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியதாவது: பாது​காப்பு விதி​களில் சமரசமில்​லை. இந்​தியா ஒரு ஆரோக்​கிய​மான, இறை​யாண்மை கொண்ட ஜனநாயகம். சமூகவலைதள அழுத்​தங்​களுக்​குப் பணிந்து அது தனது பாது​காப்​புக் கொள்​கையை மாற்றிக்கொள்ளாது.

நாடாளு​மன்​றக் குழு​வின் தலை​வ​ராக நாங்​கள் நடத்​திய ஆய்வுகளில், ஸ்டார்​லிங்க் போன்ற வெளி​நாட்டு செயற்கைக்கோள் நிறு​வனங்​களால் நாட்​டின் பாது​காப்பு முகமைகள், உள்​துறை மற்​றும் பாது​காப்பு அமைச்​சகங்​கள் எதிர்கொள்​ளும் ஆபத்​துகள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. அமெரிக்கா போன்ற நாடு​களில் ஏழைகளுக்​குக் குறைந்த விலை​யில் இணையவசதியை எலான் மஸ்க் முதலில் வழங்க வேண்​டும். இந்தி​யாவை சமூக வலை​தளங்​கள் மூலம் அவர்​ வளைக்​க முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT