தேசிய செய்திகள்

முழு அடைப்பினால் மாநிலம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தினால் மாநிலம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார், #AndraBandh

அமராவதி,

ஆந்திரபிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும்தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது.

இதற்கிடையே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

ஆந்திரா மாநிலத்தில் ஆளும் தெலுங்குதேசக் கட்சியின் ஆதரவின்றி இன்று பெரும்பாலான பகுதிகளில் முழு அடைப்பு நடைபெற்றது. இந்நிலையில்

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு காரணங்களுக்காக

எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தினால் மாநிலத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது தனக்கு வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் நடத்தப்படும் இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் மாநிலம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை எதிர்கட்சிகள் எண்ண வேண்டும்.

எதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் மாநிலத்திற்கு பயனளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர இழப்பிற்காக அல்ல எனக் கூறினார். மேலும் மாவட்ட

கலெக்டர்களுடன் நிலத்தடி நீர் வளத்தை பெருக்கும் நீரு ப்ரகதி திட்டம் குறித்தும் கலந்தாலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.