பெங்களூரு,
கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சிவமொக்காவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் தாதாவான தாவூத் இப்ராகிமை கொண்டாடும் வகையிலும், புகழும் வகையிலும் 'தாவூத் ரைஸ் ஆப் எ டான்' போன்ற வாசகங்கள் பெரிதாக எழுதப்பட்டிருந்தன.
இதை தற்செயலாக கவனித்த அப்பகுதி இந்து ஆதரவு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். உடனடியாக அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர். தேசதுரோக செயலை ஊக்குவிக்கும் வகையில் வாசகங்களை பொறித்துள்ள இந்த பஸ்சின் டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிக்கமகளூரு டவுன் போலீசார் அந்த பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், பஸ்சில் இருந்த வாசகங்களை எழுதியது யார். இதன் பின்னணியின் நோக்கம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.