மும்பை,
நாக்பூர்-மும்பை இடையே இயக்கப்படும் அதிவேக துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் நோக்கி வந்துகொண்டு இருந்தது. இரவு 8.30 மணி அளவில் நாக்பூர்-வார்தா வழித்தடத்தில் உள்ள போர்கேதி மற்றும் சிந்தி ரெயில்நிலையங்களுக்கு இடையே வந்தபோது, மர்மநபர்கள் இந்த ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த கற்கள் 2 ஏ.சி.' பெட்டி ஒன்றின் மீதும் மற்றும் '3 ஏ.சி.'யின் 2 பெட்டி கள் மீதும் தாக்கின. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கற்கள் பெட்டிக்குள் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் ரெயில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.