மும்பை
ஐஐடி வளாகத்தில் தெருநாய்களை கண்காணிக்கவும், நாய்களின் உடல் நலத்தை பராமரிக்கும் வகையிலும் புதிய டிஜிட்டல் அடையாள முறையை அறிமுகபடுத்தியுள்ளனர்.
மராட்டிய மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில், மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி பாம்பே கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் திரியும் தெருநாய்களுக்கு கழுத்தில் “க்யூ ஆர்” குறியீடு பொருத்தபட்ட பட்டைகள் ஒன்று அணிவிக்கப்படுகின்றன.
அந்த “க்யூ ஆர்” குறியீட்டை ஸ்கேன் செய்தால், சம்பந்தப்பட்ட நாயின் தனிப்பட்ட அடையாள எண், அது வழக்கமாக சுற்றித்திரியும் பகுதி, முன்பு பதிவான இடங்கள், தற்போதைய இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
மேலும், நாய்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள், மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்கள் உள்ளிட்ட சுகாதார விவரங்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகின்றன. பராமரிப்பாளர்கள் தங்கள் நாய்களை எளிதில் அடையாளம் காணவும், அவற்றின் உடல் நலத்தை கண்காணிக்கவும் இந்த முறை உதவும் என கூறப்படுகிறது.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கபட்டிருப்பதை சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சில பேர் இந்த முயற்சிக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.