தேசிய செய்திகள்

பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டாகி பலி

கர்நாடக மாநிலத்தில் லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் பஸ் சென்றபோது, ஜன்னல் வழியாக மாணவர் ஒருவர் எச்சில் துப்பத் தலையை வெளியே நீட்டினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டாகி பலியானார்.

ஐ.டி.ஐ. மாணவர்

கர்நாடக மாநிலம் நவலகுந்துவைச் சேர்ந்த பக்கிரேஷ் (வயது 17) என்ற ஐ.டி.ஐ. மாணவர், உப்பள்ளியில் இருந்து லட்சுமேஷ்வர் நோக்கி அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

தலை துண்டாகி பலி

லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் பஸ் சென்றபோது, ஜன்னல் வழியாக அந்த மாணவர் எச்சில் துப்பத் தலையை வெளியே நீட்டினார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பஸ்சை கடக்கும்போது அந்த மாணவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT