தேசிய செய்திகள்

மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய மாணவர்... இளம்பெண்கள் உள்பட 3 பேர் பலி

டீக்கடையில் டீ குடித்து விட்டு, ஸ்கூட்டரில் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

பாலக்காடு,

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிகா (வயது 22). வயநாட்டை சேர்ந்தவர் தேவிகா (21). கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் இஜாஸ் (21). இவர்கள் 3 பேரும் ஒரு கல்லூரியில் விமானத்துறை தொடர்பாக படித்து வந்தனர்.

மேலும் அவர்கள், எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் கொச்சி சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலையில் ஸ்கூட்டர்களில் சென்றனர்.

3 பேர் பலி

அப்போது அத்தாணி அருகே ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு, ஸ்கூட்டரில் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். கோபிகா, தேவிகா ஆகியோர் ஒரு ஸ்கூட்டரிலும், இஜாஸ் மற்றொரு ஸ்கூட்டரிலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபிகா, தேவிகா, இஜாஸ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கல்லூரி மாணவர் கைது

உடனே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் பிடித்து நெடும்பாசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அங்கமாலியை சேர்ந்த சுகைல் சஜீவ் (21) என்பதும், தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சுகைல் சஜீவ் 3 ஓட்டல் பார்களில் காரை நிறுத்தி மது அருந்தி விட்டு வந்தது தெரியவந்தது.

பொதுமக்கள் தாக்குதல்

எனவே கைதான சுகைல் சஜீவ் போதைப்பொருள் பயன்ப டுத்தி இருந்தாரா? என்பதை அறிய போலீசார் மருத்துவ பரி சோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு செல்லும் வழி யில் சுகைல் சஜீவை பொதுமக்கள் சிலர் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT