தேசிய செய்திகள்

‘கூகுள் மேப்’ தவறாக வழிகாட்டியதால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து விட்டதால் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் சம்பால் பகுதியை சேர்ந்தவர் பைசான் அலி என்ற மாணவர், தனது நீட் தேர்வு மையத்தை கண்டறிய கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். ஆனால், தேர்வு மையத்துக்கான தவறான இருப்பிடத்தை கூகுள் மேப்ஸ் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தவறான இடத்துக்கு சென்ற அவர், பின்னர் உண்மையான தேர்வு மையத்துக்கு சென்றபோது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து விட்டதால் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

நீண்ட நாட்களாக தேர்வுக்காக கடுமையாக தயாராகி வந்த அந்த மாணவன், கூகுள் மேப்பின் தவறு காரணமாக ஒரு கல்வியாண்டையே இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் சார்தக் என்ற மற்றொரு மாணவரும் கூகுள் மேப் காட்டிய தவறான இடத்துக்கு சென்றதால் தேர்வு மையத்தை சரியான நேரத்தில் அடைய முடியாமல் தேர்வை தவறவிட்டதாக தெரிகிறது.