கொல்கத்தா,
மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவின் கான்குர்காச்சி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தீப்பிடித்தது. டம் டம் மற்றும் பார்க் சர்க்கஸ் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதனை தொடர்ந்து தண்டவாளத்தை ஒட்டியிருந்த 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் புகை காரணமாக, புறநகர் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.