தேசிய செய்திகள்

டெல்லியில் திடீர் கனமழை; விமான நிலையத்திற்குள் புகுந்த மழைநீர்

1 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று மாலை பெய்த கனமழையால் விமான நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது.

கனமழை

தலைநகர் டெல்லியில் இன்று மாலை கனமழை பெய்தது. மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை 1 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

விமான நிலையத்திற்குள் புகுந்த மழை நீர்

இந்நிலையில், கனமழையால் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

அதேபோல், கனமழையால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. மேலும், சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

SCROLL FOR NEXT