பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தொடர்புடைய ரகசிய வீடியோ வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தலைமறைவாக உள்ள அவருக்கு போலீசார் 3-வது முறையாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தொடர்புடைய ரகசிய வீடியோ விவகாரம் மாநில அரசியல் வட்டாரத் தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் பின்னணியை கண்டறிய சைபர் கிரைம் போலீ சார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த விவகாரத் தில் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கேரள நபர், கடந்த காலத்தில் கிருபா ஆல்வாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
கிருபா ஆல்வா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தபோது, இந்த கேரள நபர் அந்த ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி உள்ளார். அப்போது கர்நாடக மாநிலத்திற்கு வெளியே இருந்து ஆணையத்திற்கு வரும் வழக்குகளின் ஆவணங்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை அவர் கவனித்து வந்துள்ளார்.
தற்போதைய விசாரணையின்படி, கேரளாவை சேர்ந்த இதே நபர் மூலமாகத்தான் ரகசிய வீடியோ வழக்கில் சிக்கி யுள்ள பெண்ணுக்கு, கிருபா ஆல்வாவுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் பலமாக சந்தேகிக்கின்றனர். மேலும், வீடியோவில் உள்ள அந்த பெண்ணை கேரளாவை சேர்ந்த இந்த நபர்தான் இங்கு அழைத்து வந்தாரா? அல்லது இதன் பின்னணியில் வேறு யாரேனும் முக்கிய புள்ளிகள் உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர மாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அந்த கேரள நபருக்கு சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 2 முறை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அந்த நபரின் கேரள வீட்டு முகவரிக்கு போலீசார் தற்போது 3-வது முறை யாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவரை பிடித்து விசாரித்தால் மட்டுமே இந்த வழக்கின் முழு பின்னணியும், முக் கிய ஆதாரங்களும் கிடைக்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.