தேசிய செய்திகள்

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு சிக்கல்? சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடுவதை வழக் கமாக கொண்டுள்ளன.இலவசங்கள் அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வரு கின்றனர். இலவச அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் வேலை என அவர் கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தேர்தலின் போது வாக்காளர்களை கவருவதற்காக அரசி யல் கட்சிகள் அரசின் பொதுப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிப் பதற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனு ஒன்றை வக்கீல் அஸ்வினி உபத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'இலவசங்களை அறிவிப்பது ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இத்தகைய அறிவிப்புகள் தேர்தலின் நேர்மையைப் பாதிப்பதோடு, அரசு கஜானாவிற் குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான மனுதாரர், 'இந்த மனுவை விரைந்து விசார ணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்' என முறையிட்டார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஒருவேளை தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு மிக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தால் அது அரசியல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை தரவும் வாய்ப்புள்ளது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.