தேசிய செய்திகள்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்

தன்மீதான குற்றச்சாட்டு பதிவை எதிர்த்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட 17 பேர் மீது டெல்லி கோர்ட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்:

தன்மீதான குற்றச்சாட்டு பதிவை எதிர்த்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா, மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி உள்ளார். வேறு அமர்வு விசாரிக்கும் என்று ஜாக்குலின் வக்கீலிடம் தெரிவிக்கப்பட்டது.