தேசிய செய்திகள்

முல்லை பெரியாறு அணை யை பராமறிக்க இடையூறு கேரளாவுக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

முல்லை பெரியாறு அணை யை பராமறிக்க கேரள இடையூறாக இருக்கிறது என தொடரபட்ட வழக்கில் கேரளாவுக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்அனுப்ப உத்தரவு.


புதுடெல்லி,

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி கே.எஸ். கேகர், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவூல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. இது தொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜூலை 2-வது வாரம் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதற்காக 7.85 கோடி ரூபாய் அணையை பலப்படுத்துவதற்காக, சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. அதனால்தான் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.