புதுடெல்லி,
திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள்-2016-ன்கீழ், போபால் மாநகராட்சி யின் செயல்பாடுகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் 2 உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் 2 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் பங்கஜ் மிதால், எஸ்.வி.என்.பட்டி ஆகி யோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
தூய்மையான, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை என்பது வாழும் உரிமையின் பிரிக்க முடியாத அங்கம். திடக்கழிவுகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்தை மட்டுமின்றி, பொருளாதாரத்தையும் பாதிக்கும். அதனால் இந்தியா திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2026ஐ முழு மையாக பின்பற்ற வேண்டும்.
ஆனால் அந்த விதிமுறைகள் நாடு முழுவதும் முழுமையாக பின்பற்றப்படவில்லை. குப்பை உருவாகும் வீடுகளிலேயே ஈரமான குப்பை, நனைந்த குப்பை, கெடுதல் விளைவிக்கும் குப்பை என்று பிரிக்கப்பட வேண்டும் என்ற கண்டிப்பான விதிமுறையே இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பெருநகரங்களில் இன்னும் பிரமாண்ட குப்பைக்கிடங்குகள் உள்ளன.
இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை. வீட்டிலேயே குப்பைகளை பிரிக்கும் அடிப்படை வேலையை செய்யாவிட்டால், விளைவுகள் பலன் அளிக்காது. எனவே, கழிவுகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பு.
இந்த விதிமுறைகள் அமலாக்கத்தில் ஒவ்வொரு குடிமகனையும் பதிவு செய்வது மேயர்கள், நகராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப் பினர்கள் ஆகியோரின் சட்டப்பூர்வ கடமை.
திடக்கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகள் கையாள்வதை கண்காணிக்கும் பொறுப்பு, மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளை புகைப்படங்கள் மூலம் கலெக்டர் களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆகவே, நாடு முழுவதும் ஏப்ரல் 1-ந்தேதி முதல், திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள்-2026 ஐ அமல்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தாவிட்டால், இனிமேல் வெறும் நிர்வாக தவறாக கருத மாட் டோம். முதல்முறை தவறுகளுக்கு குப்பை உருவாக்குவோர் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால், சுற்றுச்சூழல் சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்பார்வை பணியை சரியாக செய்யாத அதிகாரிகளுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. நடமாடும் கோர்ட்டுகள் அமைக்கும் திட்டமும் பரிசீல னையில் உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.