புனே,
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக உடைந்தது. சரத்பவாரிடம் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி அவரிடம் இருந்து கைநழுவி சென்றது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். இப்போது அஜித் பவார் மனைவி சுனத்ரா பவார் கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் மராட்டியத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளார். சுனத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக உள்ளார்.
சரத்பவார் தலைமையிலானவர்கள் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாஜக கூட்டணியில் இல்லை. தற்போது அஜித் பவார் மறைந்துள்ளதால் இருகட்சிகளும் மீண்டும் ஒன்றிணையும் என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்தநிலையில், மூத்த அரசியல்வாதியும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் மார்பு சளி பிரச்சினை காரணமாக கடந்த 2-ந்தேதி புனேயில் உள்ள ரூபிஹால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.
2 நாள் சிகிச்சைக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரியான சரத்பவார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு நரேந்திதொடர்பு கொண்டு சரத்பவாரிடம் பவாரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதுகுறித்து அவரது உதவியாளர் விட்டல் மணியார் கூறியதாவது:-
சரத்பவாரை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். மிகவும் அக்கறை யுடனும், மரியாதையுடனும் அவரிடம் பேசினார். அப் போது முழுவதும் ஓய்வு அவர் எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
சுப்ரியா சுலே (சரத்பவார் மகள்) தற்போது தயாராகி விட்டதால் அவரும் மற்றவர்களும் நாடு குறித்து கவனம் செலுத்துவார்கள் என்றும், அதனால் சரத்பவாரை ஓய்வெடுக்கும் படியும் நாடு குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
தனது உடல்நிலை குறித்து அக்கறையுடன் கேட்ட பிரதமர் மோடிக்கு சரத்பவார் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுப்ரியா சுலே இப்போது தயாராக இருக்கிறார் என்று தொலைபேசி உரையாடல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடியின் மந்திரி சபையில் சுப்ரியா சுலே இடம் பெறுவாரா? என்று யூகங்கள் உள்ளது. வெளியாகி
தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைக்கப்பட்டு மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.