தேசிய செய்திகள்

உலக எண்ணெய் சந்தையில் மீண்டும் உபரி நிலை

அக்டோபர் மாதத்தில் தேவையை விட கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரித்துள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் சந்தை நடப்பு ஆண்டின் 4-வது காலாண்டில் மீண்டும் உபரி நிலைக்குத் திரும்பும் என சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் ஏற்றுமதி சீரடைந்து வருவதால், கடந்த அக்டோபர் மாதத்தில் தேவையை விட கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரித்துள்ளது.

இதனால், 136 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய் விலை 32 சதவீதம் சரிந்து 93 டாலராகக் குறைந்துள்ளது. மேலும், வரும் 2027-ம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 10.81 கோடி பீப்பாய்களாக உயரும் எனவும், தேவை 10.43 கோடி பீப்பாய்களாக மட்டுமே இருக்கும் என்பதால் சந்தையில் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் உபரி ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT