தேசிய செய்திகள்

ஸ்விக்கி ஊழியருக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா? 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஓட்டலின் பிரமாண்டமான உள்கட்டமைப்பை பார்த்து ஸ்விக்கி ஊழியர் வியந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பொருட்களை விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவரை, வட இந்தியாவில் பிரபலமான யூடியூபரான ஜைத் மெஹ்தி என்பவர் 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவருடன் மில்க்‌ஷேக் அருந்திய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

சாலையில் எதேச்சையாக சந்தித்த ஸ்விக்கி ஊழியரிடம் பேசிய மெஹ்தி, தன்னுடன் அருகில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலுக்கு வந்து மில்க்‌ஷேக் அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். எதிர்பாராத அழைப்பால் ஆச்சரியமடைந்த அவர், மெஹ்தியுடன் செல்ல சம்மதித்தார்.

இருவரும் ஓட்டலுக்கு சென்றபோது, நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களை இருவரையும் தடுத்து நிறுத்தினர். ஸ்விக்கி ஊழியர் யூனிபார்மில் இருந்ததால் அவரை நட்சத்திர விடுதி காவலர் உள்ளே செல்ல அனுமதித்தகாக தெரிகிறது. அப்போது அந்த ஊழியரை தனது மாமா போன்றவர் என்று மெஹ்தி கூறினார். இதையடுத்தே, அவர்கள் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டலின் உள்ளே நுழைந்ததும், அதன் பிரமாண்டமான உள்கட்டமைப்பை பார்த்து வியந்த ஸ்விக்கி ஊழியர், பின்னர் மெஹ்தியுடன் அமர்ந்து மில்க்‌ஷேக் அருந்தினார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் மெஹ்தியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். “மற்றவர்களுக்கு சேவை செய்யும் எளியவர்களையும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவர்கள் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்” என நெட்டிசன்கள் யூடியூபரை பாராட்டி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT