தேசிய செய்திகள்

மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா; சுகாதார அமைச்சகம் பரிந்துரை

மருந்து விதிகளில் திருத்தங்களுடன் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மருந்து விதிகள் 1945-ல் பல்வேறு திருத்தங்களை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திருத்தங்களுடன் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக சரியான மருந்துச்சீட்டுகள் அல்லது டாக்டரின் பரிந்துரைச்சீட்டு இன்றி அட்டவணை எச்., எச்.1 மற்றும் எக்ஸ் பட்டியலில் உள்ள மருந்துகளை பெறுவதையும், விற்பனை செய்வதையும் தடுப்பதை இந்த திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது.

எனவே டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பதை கண்காணிக்க மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்துக்கான ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT