தேசிய செய்திகள்

பெங்களூருவில் தலிபான் பயங்கரவாதி கைது: பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டியது அம்பலம்

பாகிஸ்தானில் உள்ள மசூதிகள் மீதும், பொதுமக்கள் மீதும் அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேஸ்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்சினையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருகிறது.

பயங்கரவாதி கைது

கர்நாடகத்தில் கடந்த 12-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்த பயங்கரவாதி முகமது சமீர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கலபுரகி மாவட்டம் பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாலஹட்டி கிராமத்தில் பதுங்கி இருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.அசபுல் மாலிக்அவரிடம் போலீசார் விசாரனை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி வருகின்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கடந்த 11-ந் தேதியே போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால் தாமதமாகதான் அந்த தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பு

அவர் அபெத் மாலிக் என்பவரின் மகன் அசபுல் மாலிக் ஆவார். 25 வயதான அவர் மேற்கு வங்காள மாநிலம் பார்கனாஸ் மாவட்டம் நவுபார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஆண்டு(2025) செப்டம்பர் மாதம் அவர் பெங்களூருவுக்கு வந்துள்ளார். பெங்களூரு அருகே ஜிகினியை அடுத்த ஏ.பி.சி. சர்க்கிள் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். மேலும் பொம்மசந்திரா தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த அசபுல் மாலிக், தெக்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதி ஆவார்.அவர் முகநூல்(பேஸ்புக்) மூலம் தெக்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இம்ரான் அகிந்தர் என்பவருடன் நிரந்தர தொடர்பில் இருந்து வந்ததும், பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது.

இந்தியாவில் தாக்குதல்

இம்ரான் அகிந்தர், ஆப்கானிஸ்தானில் உள்ளதாகவும், அவர் தெக்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் முக்கிய நபராக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவருடன் சேர்ந்து, அசபுல் மாலிக் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ராணுவம் மற்றும் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள மசூதிகள் மீதும், பொதுமக்கள் மீதும் அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேஸ்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்சினையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு செல்ல திட்டம்

இந்த 2 விவகாரங்களுக்காக பழிவாங்க பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்த அசபுல் மாலிக் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது போல் பெங்களூரு மற்றும் கர்நாடகத்தில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த அவருக்கு இம்ரான் அகிந்தர் அறிவுறுத்தி இருந்ததாகவும், அதற்காக அவர் தகவல்களை திரட்டி வந்ததாகவும் கூறப்படு கிறது.

ஆடியோ பதிவுகள்

அதுமட்டுமின்றி அசபுல் மாலிக்கின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அவர் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவம் பற்றிய ரகசிய தகவல்களை வைத்திருந்ததையும், தாக்குதல் நடத்துவது, சதித்திட்டம் தீட்டியது தொடர்பான ஆடியோ பதிவுகள், புகைப்படங்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

கைதான அசபுல் மாலிக் மீது பெங்களூரு ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சங்கிதா(பி.என்.எஸ்.) சட்டப்பிரிவு 113(3)-சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் பயங் கரவாத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

என்.ஐ.ஏ. விசாரணை

அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இதுபற்றி போலீசார், டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்களும் பெங்களூருவுக்கு வந்து கைதான பயங்கரவாதி அச புல் மாலிக்கிடம் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் இருந்து கைப் பற்றி செல்போன் மற்றும் பிற தடயங்களை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.