புதுடெல்லி,
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த அதிபர் ஜின்பிங்குடன் பிரத மர் மோடி நேற்று முன்தினம் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமரின் இந்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், பிரதமரிடமிருந்து தேசம் சில கேள்விகளை அறிய விரும்புகிறது. அதாவது சீனாவுக்குக் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி நீங்கள் வழங்கிய நற்சான்று இந்தியாவைப் பலவீனப்படுத்தவில்லையா?.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறியது நமது அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நிலையை பெரிதும் பலவீனப்படுத்தவில்லையா? லடாக் மற்றும் தற்போது அருணாசல பிரதே சத்தில் சீனாவின் அத்துமீறல்களை பிரதமர் மோடி அனுமதிப்பது ஏன்? ஆபரேஷன் சிந்துரின் போது பாகிஸ்தானுக்கு உதவியதில் சீனாவின் பங்கு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை தளர்த்தப் பிரதமர் ஏன் அனுமதித் துள்ளார்? என்று கூறியுள்ளார்.