புதுடெல்லி,
மாநில அரசுகளின் மூலதனம் மற்றும் வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு வழங்கும் நவம்பர் மாதத்துக்கான கூடுதல் வரிப் பகிா்வுத் தவணைத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,466 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
.இது தொடா்பான மத்திய நிதித் துறையின் செய்திக்குறிப்பின்படி,
பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு மாநிலங்களுக்கான வரி பகிர்வாக ரூ.1.09 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
வரி வகிர்வின் கூடுதல் தவணையாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா ரூ.4,597 கோடி, தெலுங்கானா ரூ.2,370 கோடி, கேரளம் ரூ.2,597 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.4,504 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.19,208 கோடியும் பீகார் மாநிலத்துக்கு ரூ.10,845 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.