டெல்லி,
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு கவர்னர் அர்லேகர் இன்று சந்தித்தார்.
தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இவர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னராக கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
இதனிடையே, கவர்னர் அர்லேகர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோரை சந்தித்தார்.
இந்நிலையில், கவர்னர் அர்லேகர் இன்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் அர்லேகர் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.