தேசிய செய்திகள்

கேரளம் விபத்தில் தமிழக மாணவர்கள் பலி: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சுரேஷ் கோபி எச்சரிக்கை

நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுரேஷ் கோபி கூறினார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்க லத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வந்த கார் மோதிய கோர விபத்தில் 8 மாணவர்களும் பலியாகினர். இதுகுறித்து திருச்சூரில் அந்த தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான சுரேஷ் கோபி கூறியதாவது:- இந்த சம்பவம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் பேசினேன். அவர்களை எச்சரித்துள்ளேன். அந்த நெடுஞ்சாலை உண்மையிலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருந்ததா? ஒரு சாலை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பதற்கு சில நடைமுறைகள் உள்ளன.

அந்த இடத்தில் திசை மாற்று பலகையும் முறையாக பொருத்தப்படவில்லை. அந்த லாரி டிரைவர் செய்தது கடுமையான குற்றம். மேலும், மத்திய உள்துறை மந்திரியிடமும் இதுபற்றி பேசியுள்ளேன். இனிமேல் நெடுஞ்சாலை யில் கடுமையான ரோந்து பணி மேற்கொள்ளப்படும். போக்குவரத்து குற்றங்களுக்கு ₹25 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT