திருப்பதி,
பார்வையாளர்களை அதிகரிக்க சமூக வலைதளத்தில் திருப்பதி லட்டு தொடர்பான வீடியோவை வெளியிட்ட தமிழக நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது விசாரணை நடத்த தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தற்போது வித விதமான ரீல்ஸ் வீடியோக்கள், பதிவுகள் அதிகமாக வெளியாகிறது. பார் வையாளர்களை அதிகரிக்கும் வகையில் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அந்தவகையில் சமூகவலைதளங் களில் வைரலான வீடியோவில், தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், தனது பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 30 பேருக்கு அதை பகிர்ந்தால் 30 திருப்பதி லட்டுகளை பரிசாக வழங்குவது போல் வீடியோவை வெளியிட்டார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தனது பதிவுகளை எவ்வளவு அதிகமாகப் பகிர்கிறார்களோ, அதற்குத் தகுந்தாற்போல் லட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து புனிதமான லட்டு பிரசாதத்தை சுய விளம்பரத்திற்காகவும், சமூக ஊடகப் பின்தொடர்பவர்களை அதிகரிக்கவும் தவறாகப் பயன்படுத்தியதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு
அதிகாரி கே.வி.முரளி கிருஷ் கூறியதாவது,
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சண்முகம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அந்த காணொலிகளில் இடம் பெற்ற லட்டுகள் உண்மையானவையா என்பது இன்னும் தெளிவாகத்
தெரியவில்லை. மேலும் லட்டை வர்த்தக நோக்கத்திற்கோ அல்லது சமூகவலை தள விளம்பரங்களுக்கோ பயன்படுத்துவதையும், கருப்பு சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.