தேசிய செய்திகள்

2028-ல் விண்ணில் ஏவ இலக்கு ; சந்திரயான்-4, 5 திட்டங்களுக்கான பணிகள் தீவிரம்- இஸ்ரோ தலைவர்

ஆதித்யா விண்கலம் மூலம் அறிவியல் தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:- நேவிக் வழிகாட்டுதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட் டுள்ளது. இது விமானம், ரெயில், கப்பல் மற்றும் வாகனங்களின் வழிகாட்டுதல், பாதுகாப்பு கண்காணிப்புக்கு பெரிதும் உதவும். ககன்யான் திட்டம் சிறப்பாக நடை பெற்று வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு 3 ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்படும்.

சந்திரயான்-4, 5 திட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றை 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலம் மூலம் அறிவியல் தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. குலசேகரப்பட்டினம் ஏவுதள பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT