தேசிய செய்திகள்

உணவுக்கு பதில் டீ, காபி: விமான பயண செலவை குறைக்க ஏர் இந்தியா புதிய திட்டம்

விமானங்களில் பயணிகளுக்கான லக்கேஜ் சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஏந் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

உணவுக்கு பதில் டீ, காபி:

ஏர் இந்தியா (Air India) நிறுவனம் விமானப் பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் புதிய 'Basic Fare' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இதுவரை வழங்கப்பட்டு வந்த உணவுக்கு பதிலாக டீ அல்லது காபி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்கேஜ் சலுகைகளில் மாற்றம் இல்லை:

விமான பயணத்தின்போது உணவு வேண்டுமெனில், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்ய வேண்டும். அதேசமயம், பயணிகளுக்கான லக்கேஜ் (சாமான்கள்) சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஏந் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

'Basic Fare' புதிய திட்டம் அறிமுகம்:

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை வழங்கும் நோக்கில் 'Basic Fare' என்ற திட்டத்தின் கீழ் மேற்சொன்ன மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த 'Basic Fare' என்ற புதிய திட்டம் உள்நாட்டு விமான சேவைகளில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வரவேற்பை பொறுத்து, அடுத்தகட்டமாக பிற சேவைகளிலும் விரிவுபடுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.