தேசிய செய்திகள்

டியூசனுக்கு வந்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: ஆசிரியர் கைது

டியூசன் படிக்க வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சூண்டல் பகுதியை சேர்ந்தவர் நவுஷாத் (வயது 42). இவர் தனது வீட்டில் வைத்து பள்ளி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு டியூ சன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டியூசன் படிக்க வரும் மாணவிகளிடம் நவுஷாத் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், இதுதொடர்பாக திருச்சூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நவுஷாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.