தேசிய செய்திகள்

உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் சிகிச்சை அளித்ததால் திடீர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் சிகிச்சை அளித்ததால் மருந்து ஒவ்வாமை காரணமாக திடீர் உயிரிழந்தார்.

கான்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே சாதர்பூரில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் கீதா தேவி ( மாற்று திறனாளி ) என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கீதா தேவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் குலாப் சிங் உடல்நலம் பாதிக்கப்பட்ட கீதா தேவியை பரிசோதனை செய்தாக கூறப்படுகிறது. குலாப் சிங் வீட்டு பகுதியில் பகுதி நேர மருத்துவரகாவும் பார்த்து வந்துள்ளார். தான் தான் கற்ற அரைகுறை வைத்தியத்தை வைத்துக்கொண்டு உடல் நலம் பாதிக்கபட்ட கீதா தேவிக்கு தானே சிகிச்சை அளித்துள்ளார்.

இந்தநிலையில் கீதா தேவியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. திடீரென அவர் சுயநினைவை இழந்துந்துள்ளார். இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் கீதாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கீதாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் குலாப் சிங் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் மக்கள் தலைமை ஆசிரியர் குலாப் சிங் அவர் போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகவும், அவருக்கு மருத்துவ பட்டம் வழங்குபட்டுள்ளதாக என்பது குறித்து கன்னுஜ் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சி.எம்.ஓ டாக்டர் கிருஷ்ண ஸ்வராய்ப் கூறியுள்ளார்.