தேசிய செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை

பையஸ் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

மலப்புரம்,

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கடா பகுதியை சேர்ந்தவர் பையஸ் (வயது 30). இவர் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர், கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த பள்ளி மாணவியான 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.

சிறுமியின் பெற்றோர் மானந்தவாடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பையசை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கல்பெட்டா போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பள்ளி ஆசிரிய ருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிருஷ்ணகுமார் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பபிதா ஆஜராகி வாதாடினார்.