பனாஜி
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் கோவாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
கோவாவின் வடக்கே மொபா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.20 மணியளவில் டெல்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது அதன் இயந்திரத்தில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, உடனடியாக விமானம் திரும்பி வந்து, மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த 229 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
அவர்கள் அனைவரும் கோவாவில் இருந்து இன்று மதியம் டெல்லிக்கு புறப்பட்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.