தேசிய செய்திகள்

தெலுங்கானா: வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் வெயிலின் தாக்கத்துக்கு 22 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவில் கூடுதல் தீவிரத்துடன் உள்ளது. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் 45 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

தெலுங்கானாவிலும் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் வெயிலின் தாக்கத்துக்கு 22 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாரங்கல் மாவட்டத்தில் மட்டும் 9 பேர் மரணம் அடைந்தனர்.

இங்கு 46.4 டிகிரி வெப்பநிலை பதிவானது. மகபூப்நகர் மாவட் டத்தில் 3 பேரும், ஜெய்சங்கர் பூபால பள்ளி மாவட்டத்தில் 2 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 22 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.