ஐதராபாத்
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெதகோல்கொண்டா பகுதியில், ஷம்ஷாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், ஓ.ஆர்.ஆர். இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். சம்பவம் பற்றி அறிந்த ஷம்ஷாபாத் போலீசார் அந்த பகுதிக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி ஷம்ஷாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.