தேசிய செய்திகள்

காதலால் கலைந்துபோன போலீஸ் கனவு ;ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய காதலன் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலையில் சேர வேண்டும் என்ற இளம்பெண்ணின் கனவு காதலால் கலைந்து போனது.

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், மகபூபா பாத் மாவட்டம், நடிவாடாவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுஷ்மிதா உட்பட 2 மகள்கள்.

சுஷ்மிதாவின் பெற்றோர் விவசாய வேலை செய்து வந்தனர். சிறு வயது முதல் பெற்றோரின் கஷ்டத்தை பார்த்த சுஷ்மிதா நன்றாக படித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையில் சேர வேண்டும்.

சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி

பெற்றோரை நல்ல படியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என இரவும், பகலும் கடினமாக படித்து பட்டப்படிப்பை முடித்தார். மகபூபாபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்று வந்தார். இதற்கிடையே சுஷ்மிதாவின் வீட்டின் அருகே வசிக்கும் அணில் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அணில் சுஷ்மிதா போலீஸ் குமார் பயிற்சி மையத்திற்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக தெரிவித்து வந்தார். அதற்கு சுஷ்மிதா காதல் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை.

பேச்சில் மயங்கிய சுஷ்மிதா

நாம் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உங்களது பெற் றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என கூறினார். நான் என்னுடைய பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்.

அவரது பேச்சில் மயங்கிய சுஷ்மிதா காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் அலைபாயுதே சினிமா பாணியில் வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட பிறகு இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனால் சுஷ்மிதா கர்ப்பமானார். கர்ப்பமானதால் தன்னை பெற்றோர் சம்மதத்துடன் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என காதலனிடம் வற்புறுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அணில் குமார் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்று சுஷ்மிதாவை கடுமையாக எச்சரித்தார். மேலும் நீ வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என கூறி நிராகரித்தார்.

18 பக்க கடிதம்

இதனால் மன வேதனை அடைந்த சுஷ்மிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலை செய்வதற்கு முன்பாக 18 பக்க கடிதங்களை எழுதினார். கடிதத்தில் காதலன் செய்த துரோகம் மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என எழுதி வைத்தார்.

அலறி அடித்து ஓடி வந்த பெற்றோர்

தனது தந்தைக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அலறியடித்துக் கொண்டு விவசாய நிலத்திலிருந்து வீட்டிற்கு வந்தனர். பெற்றோர் வருவதற்குள் சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சுஷ்மிதாவின் உறவினர்கள் மகபூபாபாத்தில் சாலை மறியல் ஈடுபட்டனர். சுஷ்மிதா கடிதத்தில் குறிப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுஷ்மிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மெகபூபாபாத் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அனில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலையில் சேர வேண்டும் என்ற இளம்பெண்ணின் கனவு காதலால் கலைந்து போனது.

SCROLL FOR NEXT