நகரி
தெலுங்கானா நகைக்கடையில் ரூ.1 கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மேடிபள்ளி பகுதியில் 'கேரட் லேண் என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் பூட்டை உடைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த வைர ஆபரணங்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்த மேடிபள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.