புதுடெல்லி,
இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் உள்ளவர்களிடம் 73 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சொத்துகள் உள்ளன என கடந்த 2017ம் ஆண்டு வெளியான சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள டாவோஸ் நகருக்கு சென்றுள்ளார்.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அன்புள்ள பிரதமர் அவர்களே, சுவிட்சர்லாந்துக்கு உங்களை வரவேற்கிறோம்! இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் உள்ளவர்களிடம் ஏன் 73 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சொத்துகள் உள்ளன? என டாவோஸ் நகர மக்களிடம் தயவு செய்து கூறுங்கள். உங்களது உடனடி தகவலுக்காக அறிக்கை ஒன்றையும் இதனுடன் நான் இணைத்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்று பயணத்தினை விமர்சித்து வரும் ராகுல் காந்தி, பணக்காரர்களுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது என்றும் மற்றும் அவர்களது கடன்களை தள்ளுபடி செய்கிறது என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்.
#NarendraModi #RahulGandhi #delhi #davos