தேசிய செய்திகள்

தெலுங்கானா: பஸ் - லாரி மோதி கோர விபத்து - 6 பேர் பலி

விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் எலூர் நகருக்கு இன்று அதிகாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர்.

விபத்து 6 பேர் பலி

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டை மாவட்டம் கொடட் மண்டல் பகுதியில் ஐதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.