ஐதராபாத்,
தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் நேற்று மேற்கூரை இடிந்து விழுந்தது. பலகையால் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 நோயாளிகள், 2 செவிலியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, 6 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.